17வது ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றனர். இதில் 2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ள நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐ. விரைவில் […]
