சென்னை: பனகல் பார்க் – கோடம்பாக்கம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், மேலும் பல இடங்களில் மெட்ரோ வழித்தடத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை நகரம் முழுவதும் 118.9 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2ம் கட்டத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் வழித்தடத்தின் 4வது வழித்தடத்தில் கலங்கரை […]
