மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ச​மாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ், நாடாளு​மன்​றம் அரு​கே​யுள்ள மசூ​தி​யில் நேற்று கட்சி கூட்​டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்​பிள் யாதவ் உட்பட சமாஜ்​வாதி தலை​வர்​கள் பலர் கலந்து கொண்​டனர். டிம்​பிள் யாதவ் முக்​காடு போடா​மல் சாதா​ரண​மாக சேலை கட்டி அமர்ந்​திருந்​தார்.

இதுகுறித்து பாஜக சிறு​பான்​மை​யின மோர்ச்சா அமைப்​பின் தலை​வர் ஜமால் சித்​திக் கூறிய​தாவது: வழி​பாட்​டுத் தலமான மசூதிக்குள் நடை​பெற்ற கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்ற டிம்​பிள் யாதவ் முறை​யாக ஆடை அணி​யாமல் மசூதி விதி​முறை​களை மீறி விட்​டார்.

இது முஸ்​லிம் உணர்வை புண்​படுத்​து​வது போன்​றது. மசூ​திக்​குள் சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் கட்சி கூட்​டம் நடத்தியது கண்​டனத்​துக்​குரியது. மசூ​தி​யின் இமாம் மொஹிபுல்லா நத்வி சமாஜ்​வாதி உறுப்​பினர் என்​ப​தால், அவர் கட்சி கூட்டத்தை மசூ​திக்​குள் நடத்த அனு​ம​தித்​துள்​ளார்.

இந்த கூட்​டத்தை நடத்​தி​ய​வர்​கள் மீது எப்​ஐஆர் பதிவு செய்ய வேண்​டும். ஒவைசி போன்ற முஸ்​லிம் பிர​தி​நி​தி​கள் எங்கே சென்றனர். அவர்​கள் அமைதி காப்​பது ஏன்? சமாஜ்​வாதி கூட்​டத்​துக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டால், வரும் 25-ம் தேதி தொழுகைக்​குப்​பின் நாங்​களும் கூட்​டம் நடத்தி தேசிய கீதம் பாடு​வோம்.

அகிலேஷ் யாதவ் மசூ​திக்​குள் கட்சி கூட்​டம் நடத்​தி​யது, முஸ்​லிம்​களின் வழி​பாட்டு தலங்​கள் எல்​லாம் தன்​வசம் உள்​ள​தாக நம்புகிறார் எனத் தெரி​கிறது. இவ்​வாறு ஜமால் சித்​திக் கூறி​னார்.

டிம்​பிள் யாதவ் கூறுகை​யில், ‘‘பாஜக மக்​களை தவறாக வழிநடத்​துகிறது. மசூ​திக்​குள் கட்சி கூட்​டம் நடை​பெற​வில்​லை. தவறாக வழிநடத்​து​வது​தான் பாஜக​வின் நோக்​கம். ஆபரேஷன் சிந்​தூர் உட்பட முக்​கிய விஷ​யங்​கள் குறித்து பேச பாஜக அரசு விரும்​ப​வில்​லை’’ என்​றார். அகிலேஷ் யாதவ் கூறுகை​யில், ‘‘மக்​களை ஒன்​றிணைய விடாமல் பிரிக்​கவே பாஜக விரும்​பு​கிறது. அனைத்து மதத்தின் மீதும் எங்​களுக்கு நம்​பிக்​கை​ உண்​டு. பாஜகவின்​ ஒரு ஆயுதம்​ ​தான்​மதம்’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.