முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்களன்று (ஜூலை 21) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் இருந்ததை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை மூன்று நாள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஆஞ்சியோ மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் கூறிய […]
