AI Voice Scam: மிமிக்ரி செய்து மோசடி செய்யும் AI… எச்சரிக்கும் Open AI CEO

AI Voice Fraud: இன்றைய உலகில் எங்கும் AI, எதிலும் AI என்ற நிலை உள்ளது. மக்களுக்கு AI மீதான சார்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆனால், அனைத்து விஷயங்களுக்கும் 2 பக்கங்கள் இருக்கும் என்பது AI -க்கும் விதிவிலக்கல்ல. இது நமக்கு பல வித நன்மைளை அளிக்கும் அதே வேளையில் இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி கொடுத்த எச்சரிக்கை

– AI மோசடியின் அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் நிதித் துறையை எச்சரித்துள்ளார்.

– செயற்கை நுண்ணறிவால் (AI) இப்போது மனிதர்களின் உண்மையான குரலை அப்படியே உருவாக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். 

– இதன் உதவியுடன் பாதுகாப்பு அமைப்பை ஏமாற்றி பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முடியும். 

– சில வங்கிகள் இன்னும் அங்கீகாரத்திற்காக வாய்ஸ் ப்ரிண்டுகளைப் பயன்படுத்துவதாக பெடரல் ரிசர்வ் மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார். 

– ஆனால் AI இந்த தொழில்நுட்பத்தை முற்றிலும் பயனற்றதாக்கியுள்ளது. இந்த பாதுகாப்பு அம்சத்தை அதனால் மிக எளிதாக ஏமாற்ற முடியும்.

இப்போது வாய்ஸ், எதிர்காலத்தில் இமேஜிலும் போலி வரலாம்

– பணக்கார வங்கி வாடிக்கையாளர்களை அடையாளம் காண சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாய்ஸ் பிரிண்டிங்க்  தொடங்கப்பட்டது. 

– ஒரு கணக்கைத் திறக்க, வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட வரியைப் பேச வேண்டியிருந்தது. இதன் மூலம் உண்மையான வாடிக்கையாளர் அடையாளம் காணப்படுகிறார்.

– AI ஐப் பயன்படுத்தி, மிகவும் நேர்த்தியான குரல் போலியை உருவாக்க முடியும் என தலைமை நிர்வாக அதிகாரி ஆல்ட்மேன் கூறியுள்ளார். 

– இந்த நேர்த்தியான தொழில்நுட்பம் உண்மையான குரலுக்கும் போலி குரலுக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டுபிடிப்பதை கிட்டத்தட்ட அசாத்தியமானதாக்கும் என்று அவர் கூறுகிறார்.

– இதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில், வீடியோ குளோன்கள் வரும் என்றும் அவை இன்னும் உண்மையானதாகத் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

– ஆகையால் இப்போது புதிய மற்றும் வலுவான பாதுகாப்பு முறைகள் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

– இந்த மாநாட்டில், வளர்ந்து வரும் இந்த சிக்கலைச் சமாளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பெடரல் துணைத் தலைவர் மிச்செல் பாமன் கூறினார்.

இந்தியாவில் வாய்ஸ் பிரிண்டிங்க் உள்ளதா?

– இந்தியாவில் வாய்ஸ் பிரிண்டிங்க் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.

– ஆனால் AI இன் உதவியுடன், மோசடிக்காரர்கள் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் குரலை காபி செய்து மோசடிகளில் ஈடுபடக்கூடும்.

Voice Printing Scam: இந்த மோசடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

– எந்த எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தாலும், குரலில் இடைநிறுத்தம் (Pause) அல்லது போலித்தனம் இருந்தால், கவனமாக இருங்கள்.

– அது பதிவு செய்யப்பட்ட செய்தியாகவோ அல்லது கணினியால் உருவாக்கப்பட்ட போலி குரலாகவோ இருக்கலாம்.

– உங்களுக்குத் தெரிந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும், அந்த நபர் விசித்திரமான முறையில் பேசினாலோ, அல்லது, தனிப்பட்ட தகவல், பணம் போன்றவற்றை அவசரமாக கேட்டாலோ, எச்சரிக்கையாக இருங்கள்.

– மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உங்களை அச்சுறுத்தி அவசரத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கிறார்கள்.

– ஆகையால், இப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், அவசரத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம், அல்லது உடனடியாக பணம் செலுத்த வேண்டாம்.

– அழைப்பில் யாராவது உங்களிடம் தனிப்பட்ட விவரங்கள் அல்லது பணத்தைக் கேட்டால், எச்சரிக்கையாக இருங்கள். 

– உங்கள் முக்கியமான தகவலை தொலைபேசியில் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.