IRCTC மறந்துபோன அக்கவுண்ட்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி? முழு வழிமுறை!

IRCTC : ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய பலரும் ஐஆர்சிடிசியில் அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். ஆனால், ரயில் டிக்கெட் புக் செய்த பிறகு சில நாட்களில் அந்த அக்கவுண்டின் பாஸ்வேர்டை மறந்துவிடுவார்கள். அப்படி மறந்தபோன ஐஆர்சிடிசி அக்கவுண்டின் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை மீட்டெடுப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

IRCTC டிக்கட் சேவை:

இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் புகிங் சேவையான IRCTC பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 2002-ல் தொடங்கப்பட்ட இந்த சேவை, ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நின்று டிக்கெட் வாங்காமல், வீட்டிலிருந்தே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய உதவுகிறது. ஆனால், பல சமயங்களில் பயனர்கள் தங்களுடைய IRCTC அக்கவுண்டிற்கான லாகின் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறார்கள். அப்படி மறந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். சில எளிய படிகளைப் பின்பற்றி உங்கள் பாஸ்வேர்டை மீட்டெடுக்கலாம்.

IRCTC பாஸ்வேர்டை எப்படி மீட்டெடுப்பது?

* IRCTC வலைத்தளத்தை திறக்கவும்: எந்த Browser ஆக இருந்தாலும் சரி, அதில் IRCTC இணையதளத்தைத் திறக்கவும். பக்கத்தின் மேல் வலது பக்கத்தில் உள்ள மூன்று கோடுகள் (மெனு) மீது கிளிக் செய்து, “Login” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Forgot account details? ஐத் தேர்ந்தெடுக்கவும்: “Forgot account details?” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.

உங்கள் IRCTC ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் பயனர்பெயரை உள்ளிடவும்: உங்கள் பயனர்பெயர் (Username) மற்றும் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மின்னஞ்சலை உள்ளிடவும்.

கேப்சாவை உள்ளிட்டு Next கிளிக் செய்யவும்: கேப்சா (CAPTCHA) வினாடிக் குறியீட்டை சரியாக உள்ளிடவும். “Next” பொத்தானை அழுத்தவும்.

OTP பெறவும்: உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலில் OTP (ஒரு முறை கடவுக்குறியீடு) வரும். புதிய பாஸ்வேர்டை உள்ளிடவும், மீண்டும் கேப்சாவை நிரப்பவும்.

புதிய பாஸ்வேர்டைப் புதுப்பிக்கவும்: அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பிய பிறகு, “Update Password” என்ற ஆரஞ்சு நிற பட்டனைக் கிளிக் செய்யவும். உங்கள் பாஸ்வேர்ட் விநாடிகளில் அப்டேட் ஆகிவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.