எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நேற்​றும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்​தூர், அகம​தா​பாத் விமான விபத்​து, பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி உள்​ளிட்ட விவ​காரங்​களை மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க் கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அவர்​கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​ட​தால் அன்​றைய தினம் இரு அவை​களும் முடங்​கின. கடந்த 22, 23 ஆகிய தேதி​களி​லும் இதே விவ​காரங்​களால் நாடாளு​மன்​றம் முடங்​கியது.

இதைத் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளு​மன்​றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்​களவை தொடங்​கியதும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்​டனர். அப்​போது மக்​கள​வைத் தலை​வர் ஓம் பில்லா கூறும்​போது, “சில எம்​பிக்​கள் அவை​யின் மாண்பை சீர்​குலைத்து வரு​கின்​றனர்” என்று கடுமை​யாக கண்​டித்​தார்.

எதிர்க்​கட்​சி​யினரின் தொடர் அமளி​யால் அவை தொடங்​கிய 6 நிமிடங்​களில் ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகல் 2 மணிக்கு மக்களவை மீண்​டும் கூடியது அப்​போது கிருஷ்ண பிர​சாத் அவையை வழிநடத்​தி​னார். அவர் கூறும்​போது, “கோவா மாநில பழங்​குடி​யினர் தொடர்​பான மசோதா மீதான விவாதத்தை சுமுக​மாக நடத்த எதிர்க்​கட்​சிகள் ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்” என கேட்டுக் கொண்டார்.

சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் கூறும்​போது, “பழங்​குடி​யினர் நலன் சார்ந்த மசோதா மீதான விவாதம் சுமுக​மாக நடை​பெற வேண்​டும். இதற்கு எதிர்க்​கட்​சிகள் ஒத்​துழைப்பு தர வேண்​டும்” என்று கோரி​னார். ஆனால் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன்​காரண​மாக நாள் முழு​வதும் அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவை ஒத்​திவைப்பு: மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. பூஜ்ஜிய நேரத்​தில் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறும்​போது, “6 எம்​பிக்​களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடை​பெற இருக்​கிறது.

இதை கருத்​தில் கொண்டு எம்​பிக்​கள் அமைதி காக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார். அவரின் வேண்​டு​கோளை ஏற்று எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் அமளியை கைவிட்​டனர். பகல் 12 மணிக்கு 6 எம்​பிக்​களின் வழியனுப்பு நிகழ்ச்சி தொடங்​கியது. பகல் 12 மணி முதல் 12.30 வரை 6 எம்​பிக்​களும் அடுத்​தடுத்து அவை​யில் பேசினர்.

அவர்​கள் உரையை நிறைவு செய்​ததும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் மீண்​டும் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன்​காரண​மாக அவை பிற்​பகல் 2 மணி வரை ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகலில் மாநிலங்​களவை கூடிய​போது மீண்​டும் கூச்​சல், குழப்​பம் ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து நாள் முழு​வதும் அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. எதிர்க்​கட்​சிகளின் அமளி​யால் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்றத்​தின்​ இரு அவை​களும்​ முடங்​கி உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.