கர்நாடக வாக்காளர் பட்டியல் போல பிஹாரிலும் முறைகேடு நடக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: கர்​நாட​கா​வில் ஒரு மக்​களவை தொகு​தி​யில் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு நடந்​ததற்​கான 100% ஆதா​ரம் உள்​ளது என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடை​பெறுகிறது. இதில் இது​வரை 52 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்கு எதிர்க்​கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

இதுகுறித்து காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் மக்​கள​வைத் தேர்​தல் முடிந்த பிறகு, ஒரு தொகு​தி​யில் உள்ள வாக்​காளர் பட்​டியலை ஆய்வு செய்​தோம். அங்கு ஆயிரக் கணக்​கில் புதிய வாக்காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களின் வயது 45, 50, 60, 65 ஆக உள்​ளது. அதே​நேரம் 18 வயதுக்கு மேற்​பட்ட பல வாக்​காளர்​கள் பட்​டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இத்​தகைய முறை​கேடுக்கு எங்​களிடம் 100% ஆதா​ரம் உள்​ளது.

இது​போல பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி என்ற பெயரில் முறை​கேடு நடக்​கிறது. தேர்​தல் ஆணை​யம் தனது பணியை சரி​யாக செய்​ய​வில்​லை.

இந்த பிரச்​சினையி​லிருந்து தப்​பித்​து​விடலாம் என தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கருதுகின்​றனர். இதன் மூலம் அவர்​கள் தவறுசெய்​கிறார்​கள். ஆனால் நாங்​கள் இந்த விவ​காரம் தொடர்​பாக ஆதா​ரத்​துடன் உங்​களை அணுகு​வோம். மக்​கள் மத்​தி​யிலும் எடுத்​துச் சொல்​வோம். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.