டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அறிவித்துள்ளார். மேலும் தேசிய கல்விக்கொள்கை2020 குறைந்தது மூன்று மொழிகளில் ஒரு மாணவரை சுயாதீன பேச்சாளராகவும், வாசகராகவும், எழுத்தாளராகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மும்மொழிப் பிரச்சினை குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. மாணிக்கம் தாகூர் […]
