ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ‘குடும்ப ஓய்வூதியம்’ தொடர்பாக 2022 பிப்ரவரி 22ம் தேதி ஆயுதப்படை தீர்ப்பாயம் (AFT) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ருக்மணி தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அனுபிந்தர் சிங் கிரேவால் மற்றும் தீபக் மன்சந்தா […]
