​வார இறுதி விடு​முறையையொட்டி 980 சிறப்பு பேருந்​துகள் இயக்​கம்

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: வரும் 26, 27 வார இறுதிவிடு​ முறை என்​ப​தால் இன்​றும், நாளை​யும் (ஜூலை 25, 26) சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு 650 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு 110 பேருந்​துகளும், மாதவரத்​திலிருந்து 20 பேருந்​துகளும், பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்பு பேருந்​துகளும் என மொத்​தம் 980 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். சிறப்பு பேருந்து இயக்​கத்​தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஞாயிறன்று சொந்த ஊர்​களி​லிருந்து சென்னை மற்​றும் பெங்​களூரு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. வார இறு​தி​யில் பயணிக்க 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முன்​ப​திவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.