இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் ரக ஆல் வீல் டிரைவ் பெற்ற சைபர்ஸ்டெர் எலக்ட்ரிக் காரின் விலை ரூ74.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விலை ரூ.72.49 லட்சமாக கிடைக்கின்றது. கூடுதலாக 3.3kW போர்ட்டபிள் சார்ஜர், 7.4kW வால்பாக்ஸ் மற்றும் பொருத்துவற்கான செலவுகள் விலையில் சேர்க்கப்பட்டுள்ளது. கத்திரிக்கோல் வகையிலான திறக்கும் கதவுகளை பெற்றுள்ள சைபர்ஸ்டெரில் 77Kwh பேட்டரி பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 510 PS பவர் மற்றும் 725Nm டார்க் வழங்குகின்றது […]
