'பில்கேட்ஸூக்குப் பரிசாக தூத்துக்குடி முத்து; திருச்செந்தூர் முருகர் அருள்!' – பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.

மோடி
மோடி

பிரதமர் மோடி பேசியதாவது, ‘இன்று கார்கில் வெற்றித் திருநாள். நான் முதன்மையாக கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நான்கு நாட்கள் அயல்நாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக பகவான் இராமேஷ்வரரின் பூமியில் கால் வைத்திருக்கிறேன்.

பாரதம் மற்றும் இங்கிலாந்துக்கிடையே வரலாற்றுப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. பாரதத்தின் மீது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. பகவான் இராமேஷ்வரர் மற்றும் திருச்செந்தூர் முருகரின் ஆசியால் தூத்துக்குடியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த செப்டம்பரில் வ.உ.சி துறைமுகத்தில் புதிய சரக்குப் பெட்டி முனையத்தை நாட்டுக்கு சமர்ப்பணம் செய்தேன்.

மோடி
மோடி

4800 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவும் அடிக்கல் நாட்டப்படவும் இருக்கின்றன. இதே மண்ணில்தான் வ.உ.சி போன்ற தொலை நோக்காளர்கள் இருந்திருக்கின்றனர். அடிமைப்பட்டுக் கிடந்த போது கூட கடல் வாணிபத்தைப் பற்றி சிந்தித்தவர் அவர். இந்த மண்ணில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன் ஆகியோர் சுதந்திர பாரதத்துக்கான கனவை காணச் செய்தனர்.

மோடி
மோடி

பாரதியும் அருகேதான் பிறந்திருக்கிறார். அவருக்கும் தூத்துக்குடிக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறதோ அதே அளவுக்கான தொடர்பு என்னுடைய தொகுதியான வாரணாசியோடும் அவருக்கு இருக்கிறது. கடந்த ஆண்டுதான் தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸூக்கு பரிசாக அளித்தேன். அவருக்கு அந்த முத்துகள் ரொம்பவே பிடித்திருந்தது. இங்கிலாந்துடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உலகளவில் மூன்றாவது பொருளாதார நாடாக பாரதம் மாறும். ஆப்பரேசன் சிந்தூரில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்களிப்பு பெரிதாக இருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறோம். இது யுபிஐ அரசாங்கம் ஒதுக்கிய நிதியை விட 3 மடங்கு அதிகம். கடந்த 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்கிறோம்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.