சென்னை: நடப்பாண்டில் 4ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்துள்ளது. இது மதுரை சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு பரவலாக மழை பெய்து வருவதால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயம் மீண்டும் தழைத்தோங்கி உள்ளது. சமீப […]
