Amazon Great Freedom Festival Sale 2025: பிரபல ஆன்லன் விற்பனை தளமான அமேசான் தனது அடுத்த சேலுக்கு தயாராகிவிட்டது. அமேசான் இந்தியாவில் தனது கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 தேதியை அறிவித்துள்ளது. இந்த விற்பனை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025
– அமேசானின் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 -இல் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் முதலில் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
– இந்த விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தனி பாகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அமேசான் பிராண்ட் தயாரிப்புகளில் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெற முடியும்.
– இது தவிர, அமேசான் SBI கார்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் உடனடி தள்ளுபடிகள், பரிமாற்ற சலுகைகள் மற்றும் எளிதான EMI விருப்பங்களையும் பெறுவார்கள்.
Amazon Great Freedom Festival Sale 2025: ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும்
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 விற்பனை ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த விற்பனையை மற்றவர்களை விட 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே அணுக முடியும். ஆகையால் சலுகைகளை அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கும்.
இந்த விற்பனை எவ்வளவு காலம் நடைபெறும்? அதன் கடைசி தேதி என்ன? இந்த விவரங்கள் குறித்து எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவர் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெற விரும்பினால், அதன் மாதாந்திர விலை ரூ.299, காலாண்டுக்கு ரூ.599 மற்றும் ஆண்டு விலை ரூ.1,499 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Amazon Prime Shopping Edition -இன் விலை ஒரு வருடத்திற்கு ரூ.399 ஆக உள்ளது.
SBI கிரெடிட் கார்டில் சலுகைகள் கிடைக்கும்
– SBI உடனான அமேசானின் கூட்டாண்மை காரணமாக, வாடிக்கையாளர் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், அவருக்கு EMI பரிவர்த்தனையில் 10% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
– இது மட்டுமல்லாமல், கட்டணமில்லா EMI வசதியும் வழங்கப்படுகிறது.
– இது தவிர, வாடிக்கையாளர்கள் பரிமாற்ற சலுகையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
– இந்த விற்பனையில், இரவு 8 பிஎம் டீல்ஸ், டிரெண்ட்ங் டீல்ஸ் போன்ற சில லிமிடட் டைம் ஆஃபர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிக சேமிப்புடன் சிறந்த ஷாப்பிங்
– இந்த முறை பயனர்களுக்கு Amazon Pay-அடிப்படையிலான சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் போன்ற வசதிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– இது நிதிச் சுமையைக் குறைக்கும்.
– விரைவில் இந்த விற்பனையின் சலுகைகளின் விவரங்கள் வெளிவரும் என கூறப்படுகின்றது.
– அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் சாத்தியமான சலுகைகள் பற்றி அறியக்கூடும்.
– வாடிக்கையாளர்கள் மற்ற வலைத்தளங்களில் உள்ள பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
– இது சிறந்த சலுகையைத் தேர்வுசெய்யவும், ஷாப்பிங் செய்யும் போது அதிகமாகச் சேமிக்கவும் உதவும்.