ஆதார் பயோமெட்ரிக் லாக், அன்லாக் அம்சம் பற்றி தெரியுமா? முழு விவரம்

Aadhaar ; ஆதார் என்பது நம் நாட்டு மக்களின் ஒவ்வொரு குடிமக்களின் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும். இது அரசு சேவைகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் அங்கீகாரத்திற்கு பயன்படுகிறது. உங்கள் பயோமெட்ரிக் தரவுகளை, அதாவது கைரேகை, கருவிழி பாதுகாக்க UIDAI வழங்கும் லாக்/அன்லாக் வசதியைப் பயன்படுத்தலாம்

ஆதார் பயோமெட்ரிக் லாக்/அன்லாக் செய்வது எப்படி?

– UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் (uidai.gov.in) செல்லவும்.
– “Aadhaar Services” → “Lock/Unlock Biometrics” தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் 12-இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெறவும்.
– OTP உள்ளிட்டு உறுதிப்படுத்திய பின், “Lock Biometrics” அல்லது “Unlock Biometrics” செய்யலாம்.

ஆதார் லாக் மற்றும் அன்லாக் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நீங்கள் உங்களின் ஆதாரை லாக் செய்தால், ஆதார் அங்கீகாரம் வேல் செய்யாது. அதாவது, வங்கி/ஏடிஎம் சேவைகள் மற்றும் ஆர்ஆர்பி போன்ற தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் ஆதார் அங்கீகாரம் வேலை செய்யாது. அதேநேரத்தில் தேவைப்படும்போது அன்லாக் செய்தும் கொள்ளலாம். இதற்கு உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது ஓடிபி உங்கள் மொபைலுக்கு வரும். அந்த ஓடிபியை உள்ளிட்டால் இந்த இரண்டையும் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

1. ஆதார் புதுப்பிப்பு போர்டலில் நுழையவும் – UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் (uidai.gov.in) சென்று, “Update Aadhaar Details Online” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

2. OTP மூலம் உள்நுழையவும் – உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெறவும். அந்த OTP-ஐ உள்ளிட்டு உள்நுழையவும்.

3. புதுப்பிப்பு கோரிக்கையைத் தொடங்கவும் – “Update Aadhaar Online” என்பதைத் தேர்ந்தெடுத்து, டிஜிட்டல் வழியாக மாற்றங்களைச் செய்யவும்.

4. மாற்ற வேண்டிய தகவலைத் தேர்ந்தெடுக்கவும் – பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், முகவரி புதுப்பித்தல், மொபைல்/மின்னஞ்சல் மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

5. சரியான தகவலை உள்ளிடவும் – தவறான தகவலுக்குப் பதிலாக சரியான தகவலை கவனமாக உள்ளிடவும்.

6. ஆதார ஆவணங்களை அனுப்பவும் – மாற்றத்தை உறுதிப்படுத்தும் செல்லுபடியான ஆவணங்களின் ஸ்கேன் காபியை (PDF/JPEG) அப்லோட் செய்யவும்.
(எ.கா: பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்கர் அட்டை போன்றவை).

7. மறுபரிசீலனை & சமர்ப்பிக்கவும் – எல்லா தகவல்களையும் சரிபார்த்து, “Submit” (சமர்ப்பிக்க) கிளிக் செய்யவும்.

8. URN (உதவி எண்) பெறவும் – உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், ஒரு URN (Update Request Number) கிடைக்கும். இதைப் பதிவு செய்து, அப்டேட்டைக் கண்காணிக்கவும்.

9 . பயோமெட்ரிக்ஸ் மாற்ற முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.