அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தவர், சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார். சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆத்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டது; கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து விட்டேன். தமிழ் மொழியில் பகவத்கீதையின் இசைத் தொகுப்பு வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது; […]
