Is gautam gambhir removed from head coach: இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை முடிவடைந்துள்ள 3 போட்டிகளில் இரண்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், அந்த அணியே இப்போட்டியில் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் மோசமான ரெக்கார்ட்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை மட்டுமே எடுத்தது . இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்களை எடுத்து 311 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இன்று ஒரு நாளே இருப்பதால், ஒன்று இங்கிலாந்து அணி வெற்றி பெறும் அல்லது போட்டி டிராவில் முடியும். ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றிவிடும். அப்படி இங்கிலாந்து அணி இத்தொடரை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு பெரிய சிக்கை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிந்த பின்னர் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது தலைமையில் இந்தியா சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை கம்பீரின் தலைமையில் 13 போட்டிகளில் இந்தியா விளையாடி அதில் வெறும் 4 போட்டிகளில் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கிறது. 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மட்டும் டிராவில் முடிவடைந்துள்ளது.
கம்பீர் பயிற்சியாளராக நீட்டிப்பாரா?
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தடுமாறினாலும், ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கம்பீருக்கு பெருமை சேர்த்தது. டி20 போட்டிகளில் கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு இருக்கிறது. மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி அதில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி கம்பீரின் வழிகாட்டுதலில் இந்திய அணி டெஸ்ட்டில் மட்டும்தான் சொதப்பி உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது.
புதிய பயிற்சியாளர் யார்?
டெஸ்ட்டில் வங்கதேசத்திற்கு எதிராக மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் தோல்விகளை தழுவியது. தற்போது இங்கிலாந்து தொடரும் கையை விட்டு போகும் அபாயம் உள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரின் முடிவை பொருத்தே கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பில் நீட்டிப்பாரா இல்லையா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. மேலும், கவுதல் கம்பீர் ஒருவேளை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிங்க: Rishabh Pant: இன்று ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
மேலும் படிங்க: இங்கிலாந்து தொடருக்கு இடையில் திடீர் ஓய்வை அறிவித்த 32 வயது வீரர்!