டெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு வழங்கியது சரியானது என தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முறையாக ஒப்புதல் வழங்காத நிலையில், அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் ஒப்புதல் […]
