Google AI Courses: இன்றைய காலகட்டத்தில், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் AI பற்றிய அறிவைப் பெறுவது முக்கியம். கூகிள் சமீபத்தில் பல AI கோர்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை யார் வேண்டுமானாலும் இலவசமாக அணுகி படிக்கலாம். கூகிள் தொடங்கிய ஐந்து முக்கிய கோர்ஸ்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் AI டூல்ஸ்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸ்கள் Google Cloud Skills Boost -இல் கிடைக்கும்.
BERT மாடல்கள்
– BERT என்பதன் ழுழு வடிவம் Bidirectional Encoder Representations from Transformers ஆகும்.
– இது AI இல் உரையை (டெக்ஸ்ட்) சரியாகப் பயன்படுத்தப் பயன்படுகிறது.
– இந்தப் கோர்சின் மூலம் நீங்கள் AI உடன் சேட் செய்யும் பக்கத்தை உருவாக்கலாம்.
– இதன் மூலம் கண்டென்ட் எழுத்தாளர்கள் தங்கள் கண்டெண்டை எடுத்து அதைப் பயன்படுத்தலாம்.
– இந்தப் கோர்ஸ் 45 நிமிடங்களுக்கானது.
– இது ஒரு முக்கிய ஏஐ கோர்ஸாக கருதப்படுகின்றது.
Vertex AI ஸ்டுடியோ
– Vertex AI ஸ்டுடியோ கோர்ஸ் மூலம், ஒரு ஜெனரேட்டிவ் AI பயன்பாட்டை உருவாக்கலாம்.
– இந்த கோர்ஸை கற்றுக்கொள்வதன் மூலம் ஏப் டெப்ளாய்மெண்ட், பிராம்ப்ட் எஞ்சினியரிங், மாடல் டியூனிங் ஆகியவை பற்றிய தகவல்களைப் பெறலாம்.
– இந்த கோர்ஸ் ஸ்டார்ட் அப் ஒன்றை தொடங்க விரும்பும் நபர்களுக்கு ஏற்றதாக இருக்கும்
– இந்த கோர்ஸ் சுமார் 2 மணிநேரங்களுக்கானது.
ரெஸ்பான்சிபிள் AI
– இந்தப் கோர்சில், தலைமைத்துவம், கொள்கை, மனிதவளம் மற்றும் கண்டென்ட் எழுத்தாளர் துறையில் பயன்படுத்தப்படும் கூகிள் வழங்கிய 7 AI கொள்கைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
– கூகிள் வழங்கும் இந்த கோர்ஸை 30 நிமிடங்களில் முடிக்கலாம்.
இமேஜ் ஜெனரேஷன்
– கூகிளின் இந்தப் கோர்ஸ் டெஃப்யூஷன் மாடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறது.
– இந்த மாடல் பட உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
– இந்தப் கோர்ஸ் பட உருவாக்கத்திற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தை விளக்குகிறது.
– சமூக ஊடகங்கள், பிராண்டிங், UI வடிவமைப்பு போன்ற இடங்களில் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்.
அடென்ஷன் மெகானிசம்
– இந்த கோர்ஸில் சம்மரைசேஷன் (சுருக்கம்), மொழிபெயர்ப்பு மற்றும் கேள்வி-பதில் AI ஆகியவற்றை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
– ChatGPT -இல் அடென்ஷன் மெகானிசம் பயன்படுத்தி கேள்வி-பதில் பகுதி செய்யப்படுகிறது.
– அது போலவே, நீங்கள் இந்த கோர்ஸை கற்றால், பல வேலைகளுக்கான வாய்ப்புகள் உங்களுக்காக அதிகரிக்கும்.