சென்னை: தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட அதிமுக திட்டங்கள் அனைத்தும், அடுத்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும் என அதிமுக பொதுச்செய லாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற கொள்கை முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது மக்களின் குறைகளை கேட்டு வருவதுடன், அதிமுகவின் திட்டங்களையும் கூறி வருகிறார். ஏற்கனவே “மக்களை காப்போம், […]
