Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்றது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவானது. இந்த நிலையில், இந்த இரு அணிகளும் தங்களின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக அணியை எடுத்து சென்றிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு இன்னிங்ஸில் கூட அரைசதம் அடிக்காத கருண் நாயரை ஏன் மீண்டும் சேர்த்தார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏன் மீண்டும் வாய்ப்பு?
இது தொடர்பாக பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலவீணமாக காட்சி அளிக்கின்றது. எனவே நடுவரிசையில் நிலையான வீரர் தேவை என்பதன் காரணத்தினால் கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம். அவர் ரிஷப் பண்ட்டின் இடத்தில் களம் இறங்குவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தற்காப்பு மனநிலைமை
இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மிகவும் தற்காப்பு மனநிலையில் இருந்து இப்படி அணியை தேர்வு செய்திருக்கிறார். தங்களது பேட்ஸ்மேன்களிடம் நம்பிக்கை இல்லாமல், கூடுதலாக பேட்ஸ்மேன்களை சேர்த்துள்ளார் என பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். பேட்ஸ்மேன்கள் மேல் நம்பிக்கை இருந்திருந்தால், அவர் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை எடுத்திருப்பார். அவர் இங்கிலாந்து அணியை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து சிந்தித்திருப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மேலும், இந்திய அணி இப்படியான தற்காப்பு மனநிலையில் இருந்தபோது, விராட் கோலி தான் அந்த மனநிலைமையை மாற்றி அணி வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை கொண்டு வந்தார் என்றும் அந்த உத்வேகத்தில் இருந்து தற்போது கம்பீர் பின்வாங்கி உள்ளார் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிங்க: அப்போ ஸ்ரேயாஸ், இப்போ கேஎல் ராகுல்.. டெல்லி பிளேயரை குறி வைக்கும் கேகேஆர்
மேலும் படிங்க: இந்திய அணியில் இந்த வீரர் விளையாட மாட்டார்… சுத்தி வளைத்து சொன்ன சுப்மான் கில் – யார் அவர்?