ஆந்திராவில் உள்ள கிரானைட் குவாரியில் பரிதாபம்: பாறைகள் விழுந்து 6 ஒடிசா தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாபட்லா: ஆந்​திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரி​யில் பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் 10 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

இதுகுறித்து ஆந்​திர மாநில காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ஆந்​திர மாநிலம் பாபட்லா மாவட்​டத்​தில் பல்​லிகுரவா கிராமத்​துக்கு அருகே உள்ள சத்​யகிருஷ்ணா கிரானைட் குவாரி​யில் நேற்று காலை 16 தொழிலா​ளர்​கள் பணி​யில் இருந்​துள்​ளனர்.

அப்​போது, திடீரென பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், 6 பேர் உடல் நசுங்கி உயி​ரிழந்​தனர். 10 பேர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்டு நரச​ராவ்​பேட்​டில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். இதில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது. பாறை​களுக்கு அடி​யில் சிக்​கிய​வர்​களின் உடல்​களை மீட்​கும் பணி தொடர்ந்து நடந்து வரு​கிறது. இது​வரை 2 தொழிலாளர்களின் உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன.

கிரானைட் குவாரி​யில் போது​மான பாது​காப்பு வசதி​கள் செய்​யப்​ப​டாததே விபத்​துக்கு காரணம் என்று முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

முதல்வர் சந்திரபாபு இரங்கல்: கிரானைட் குவாரி விபத்​தில் உயி​ரிழந்த ஒடிசா தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களுக்கு ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். விபத்து தொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்த அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார். காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தொழிலா​ளர்​களுக்கு உரிய சிகிச்​சை, மருத்​துவ உதவி​கள் வழங்​கு​மாறு​ அதி​காரி​களுக்​கு அறி​வுறுத்​தி​உள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.