Yuzvendra Chahal emotional interview: அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், ராஜ் ஷமானி என்பவரின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலர் விஷயங்களை பகிர்ந்துகொண்டார். முன்னதாக ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவின் Who is the Boss? என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், சாஹல் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என கேட்கப்பட்டது.
ரோகித் மற்றும் ரித்திகா
இதை கேட்டதும் ரோகித் சர்மா பயங்கரமாக சிரித்தார். அவரது மனைவி ரித்திகா கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் ஒரு ‘கார்ட்டூன்’ என கூறினார். இதை கேட்ட ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவி கீதா பஸ்ராவும் சிரித்தனர். பின்னர் அவர் எப்போதுமே ஒரு கார்ட்டூன் மாதிரிதான் என மேலும் கூறினார். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ராஜ் ஷமானி சூசகமாக சாஹலிடம் கேட்டார். அப்போது சாஹலின் முகம் சட்டென மாறியது. அவர் இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்து பின்னர் சிரித்தப்படி மட்டும் அவர் பதில் அளித்தார். அவரது அந்த மெளனம் மற்றும் முக பாவனை அவர்கள் அப்படி கூறியது எந்த அளவிற்கு காயப்படுத்தியது என்பதை பார்த்ததும் புரிந்துக்கொள்ள முடிந்தது.
பின்னர் இது குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல், நான் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவன். மரியாதையாக பழகுவேன் மற்றும் மிகவும் ஜாலியாக பேசுவேன். அதனால் என்னை சிலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இவனை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவன் எதுவும் சொல்லமாட்டான் என நினைக்கிறார்கள். அவ்வளவு எளிதாக நான் வருத்தப்படக்கூடியவன் அல்ல. நான் விரும்பியபடி எனது வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால் சில நேரங்களில் சில விஷயங்கள் கடுமையாக மனதை தாக்கி காயப்படுத்துகின்றன என சாஹல் மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
தனஸ்ரீ உடனான உறவு
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் மனைவி தனஸ்ரீ-யுடன் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உறுதிபடுத்தினார். அவருடன் அவர் கடைசியாக கடந்த 2024 செப்டம்பரில் விவாகரத்தின்போதுதான் பேசியதாக அவர் கூறினார். எங்களுக்குள் எந்த பெரிய சண்டையும் இல்லை என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் இருந்து முன்னேறி செல்வதே சிறந்ததாக இருக்கும் என்று அவர் உணர்ந்ததாகவும் கூறினார்.
மேலும் படிங்க: சிராஜ் செய்த பெரிய தவறு… வச்சு செய்த ஹாரி புரூக் – தொடரை இழக்கும் இந்தியா?
மேலும் படிங்க: பும்ரா இல்லாத போட்டியில் மட்டும் எப்படி நல்ல பந்து வீசுறீங்க? சீராஜ் சொன்ன சீக்ரெட்!
