“என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்'' – இஸ்ரேல் பணயக் கைதி கதறல்; நெதன்யாகு, ஹமாஸ் ரியாக்‌ஷன்?

“என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது.

என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிறேன்.

என்னை விடுவிக்க வேண்டிய நேரமும், என்னுடைய குடும்பத்துடன் நான் கட்டிலில் உறங்கும் நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது”.

இது பேச சக்தி இல்லாமல், விட்டு விட்டு மெதுவாக சின்ன சின்ன இடைவெளிகளுக்கு பின் எவியாதர் டேவிட்டின் வார்த்தைகள்.

யார் இந்த எவியாதர் டேவிட்?

எவியாதர் டேவிட் கிட்டாரிஸ்ட் மற்றும் பியோனோ பிளேயர் ஆவார்.

2023-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தொடங்கியது.

அதே மாதம், நோவா இசை விழாவில் கலந்துகொண்டிருந்த இவரை ஹமாஸ் கடத்திக்கொண்டு போனது.

எவியாதர் டேவிட் | Evyatar David
எவியாதர் டேவிட் | Evyatar David

வெளியான வீடியோ

அதன் பிறகு, இவரைப் பற்றிய வீடியோ சமீபத்தில் ஹமாஸ் வெளியிட்டது.

அதில், ‘எவியாதர் எலும்பு தோலுமாக, உடல் நலிவற்று கையில் மண்வெட்டியுடன் குழியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார். சாப்பிட்டு பல நாள்கள் ஆகிறது. என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்” என்றும் கூறுகிறார்.

இந்த வீடியோ வைரலாக, உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை குரல்களும் எழுந்தன.

நெதன்யாகுவின் கோரிக்கை

இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பாலஸ்தீனத்தில் இருக்கும் பணயக் கைதிகளைக் காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நெதன்யாகு
நெதன்யாகு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்ன சொல்கிறது?

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில், ‘பணயக் கைதிகளின் வீடியோக்களைப் பார்க்கும்போது, அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களைப் பார்க்கவும், அவர்களைப் பரிசோதிக்கவும் அனுமதி வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸின் பதில் என்ன?

காசா பகுதியில் இருக்கும் மக்களுக்கு உணவுப்பொருள்கள் சேர்ந்தால் தான், இந்த அனுமதி கிடைக்கும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

எவியாதர் டேவிட் உடன் ரோம் பிராஸ்லாவ்ஸ்கியின் புகைப்படம் மற்றும் வீடியோவும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பு மோதிக்கொள்வதில் பாதிப்படைவது என்னவோ மக்கள் தான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.