26 ஆண்டுகளுக்குப் பிறகு இமாச்சலில் மீண்டும் லாட்டரி

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் 26 ஆண்​டு​களுக்கு பிறகு லாட்​டரியை மீண்​டும் அனு​ம​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இமாச்சல பிரதேசத்​தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யில் லாட்​டரிக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த வியாழக்​கிழமை நடை​பெற்ற மாநில அமைச்​சரவை கூட்​டத்​தில் லாட்​டரியை மீண்​டும் அறி​முகப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது. மாநிலத்​தின் வரு​வாயை பெருக்க இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இமாச்​சல் அரசின் கடன் ரூ.1,04,729 கோடி​யாக உள்​ளது. வரு​வாய் பற்​றாக்​குறை மானி​யம், அதாவது மத்​திய அரசின் நிதி​யுதவி 2025-ல் முந்​தைய ஆண்டை விட குறைக்கப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டுகிறது. இந்​நிலை​யில் நிதிப் பற்​றாக்​குறையை எதிர்​கொள்​ளும் நடவடிக்​கை​களில் ஒன்​றாக லாட்​டரியை அனு​ம​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான மசோதா வரும் 18-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

கேரளா, பஞ்​சாப், ம.பி., மகா​ராஷ்டி​ரா, சிக்​கிம் உள்​ளிட்ட 13 மாநிலங்​களில் லாட்​டரிக்கு சட்​டப்​பூர்வ அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த நிதி​யாண்டில் லாட்​டரி மூலம் பஞ்​சாப் ரூ.235 கோடி​யும், சிறிய மாநில​மான சிக்​கிம் ரூ.30 கோடி​யும் வரு​வாய் ஈட்​டி​யுள்​ளன. கேரளா ரூ.13,582 கோடி​யுடன் முதலிடத்​தில் உள்​ளது.

இந்​நிலை​யில் மற்ற மாநிலங்​களை போல லாட்​டரி​களை நடத்​து​வதற்கு டெண்​டர் நடை​முறையை பின்​பற்ற உள்​ள​தாக மாநில தொழில்​துறை அமைச்​சர் ஹர்​ஷவரதன்​ சவு​கான்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.