Flipkart Freedom Sale 2025: ஃபிளிப்கார்ட் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சிறந்த விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 -இல் ஸ்மார்ட்போன்கள், குளிர்சாதன பெட்டிகள், டேப்லெட்டுகள், மைக்ரோவேவ், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் ஏசிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்
இந்த விற்பனையில், நீங்கள் 1 முதல் 2 டன் ஸ்பிளிட் ஏசியை ரூ.25,000 அல்லது அதற்கும் குறைவான விலையில் வாங்கலாம். ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் சாம்சங், வோல்டாஸ், கோத்ரெஜ், கேரியர் போன்ற பெரிய பிராண்டுகளில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் இந்த பம்பர் விற்பனையை விரைவில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 -இல், சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் பிராண்ட் ஏசி -கள் பற்றி இங்கே காணலான்:
MarQ AC
– ஃபிளிப்கார்ட்டின் சொந்த பிராண்டான மார்க்யூவின் 1 டன் ஸ்பிளிட் ஏசி சிறந்த சலுகைகளில் கிடைக்கிறது.
– இது 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் அம்சம் மற்றும் டர்போ கூலிங் கொண்ட 3 ஸ்டார் மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பத்தில் வருகிறது.
– இதன் விலை ரூ.23,990 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் ரூ.1,500 உடனடி வங்கி தள்ளுபடியும் கிடைக்கும்.
Samsung AC
– சாம்சங்கின் AI ஏசி ரூ.40,489 விலையில் கிடைக்கிறது.
– வாடிக்கையாளர்கள் இந்த ஏசியை வாங்க விரும்பினால், ரூ.1,500 வரை வங்கி தள்ளுபடியைப் பெறலாம்.
– இந்த 1.5 டன் கொள்ளளவு கொண்ட ஏசி 5 ஸ்டீப் கன்வர்டபிள் கூலிங் ஃபங்ஷனுடன் வருகிறது.
– இது 3 ஸ்டார் ஆற்றல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
Godrej AC
– கோத்ரேஜின் 5 இன் 1 கன்வர்டபிள் ஏசி 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
– இது இந்த சேலில் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கிறது.
– இந்த ஏசி 30% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.31,990க்கு கிடைக்கிறது.
– ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அதை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Voltas AC
– வோல்டாஸின் புதிய 2025 மாடல் ஏசி இப்போது மிகவும் வலுவான சலுகைகளில் கிடைக்கிறது.
– 1.5 டன் மற்றும் 3 ஸ்டார் மதிப்பீட்டு ஸ்பிளிட் ஏசியை வாடிக்கையாளர்கள் ரூ.32,990 -க்கு வாங்கிச்செல்லலாம்.
– இது 4 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் பயன்முறையைக் கொண்டுள்ளது.
– இதன் உதவியுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப குளிரூட்டலை அமைக்கலாம்.
– மேலும், வாடிக்கையாளர்கள் ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் ரூ.1,500 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும் பெறலாம்.
Carrier AC
– கேரியரின் 2025 மாடல் 6 இன் 1 கன்வெர்ட்டிபிள் ஏசியின் விலை ரூ.31,990.
– 1 டன் ஏசியில் இன்வெர்ட்டர் ஸ்மார்ட் எனர்ஜி டிஸ்ப்ளே கிடைக்கிறது.
– மேலும், நிறுவனம் கம்ப்ரசருக்கு 10 ஆண்டுகள் உத்தரவாதத்தையும், பிசிபிக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
– 3 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் பெற்ற ஏசியை வாங்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.