சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் […]
