Asia Cup 2025: இந்திய அணியின் (Team India) அடுத்த மிஷன் ஆசிய கோப்பை 2025 தொடராகும். அடுத்தாண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2026) நடைபெற இருப்பதால், ஆசிய கோப்பை தொடரும் டி20 வடிவத்திலேயே நடைபெற இருக்கிறது. கடந்த முறை ஓடிஐ வடிவத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Asia Cup 2025: ஆசிய கோப்பை எப்போது?
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங் காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இத்தொடர் அபுதாபியில் செப். 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், செப். 28ஆம் தேதி அன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெற இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப். 14ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது.
Asia Cup 2025: கேப்டன் சூர்யகுமார் வருவாரா?
அந்த வகையில், ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் (Indian Team Squad) விரைவில் அறிவிக்கப்படலாம். சூர்யகுமார் யாதவ் காயத்தில் (Suryakumar Yadav Injury) இருந்து மீண்டு கேப்டனாக வருவாரா அல்லது அவருக்கு பதில் யார் கேப்டன்ஸியை பார்த்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் தற்போது வலுவாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
Asia Cup 2025: கம்பேக் கொடுக்கும் குர்னால் பாண்டியா?
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடில் ஆல்-ரவுண்டராக குர்னால் பாண்டியா சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக குர்னால் பாண்டியா (Krunal Pandya) சர்வதேச போட்டிகளில் விளையாடி நான்காண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் குர்னால் சிறப்பாக பந்துவீசியிருந்தார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்கள் எகானமியில் பந்துவீசியிருந்தார். பந்துவீச்சில் மட்டுமின்றி கீழ்வரிசை பேட்டராக களமிறங்கி அரைசதமும் அடித்தார்.
Asia Cup 2025: எதிரணிக்கு தலைவலி உறுதி
குர்னால் பாண்டியா வைத்திருக்கும் வேரியேஷன்கள் நிச்சயம் இந்திய அணிக்கு கைக்கொடுக்கும். வேகமான பவுன்சர்கள் முதல் யார்க்கர் வரை அனைத்தும் பேட்டர்களை அச்சுறுத்தும். பவர்பிளே, மிடில், டெத் என ஆட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்துவீசக் கூடியவர் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் குர்னால் பாண்டியா பெரியளவில் உதவிகரமாக இருப்பார். அதுவும் வருண் சக்ரவர்த்தியும் இருந்தால் எதிரணிக்கு தலைவலி உறுதி.
Asia Cup 2025: 3 வீரர்களுக்கும் கடும் போட்டி
தற்போது டி20ஐ அணியில் இருக்கும் ரியான் பராக் (Riyan Parag) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) ஆகியோருக்கு குர்னால் பாண்டியா கடும் போட்டியளிப்பார். ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினால் விக்கெட் எடுக்கும் சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை எனலாம். எனவே, அட்டாக்கிங் பௌலருக்காக கம்பீர் குர்னால் பாண்டியாவுக்கு வாய்ப்பளிப்பார் என கூறப்படுகிறது. இவர் நம்பர் 8இல் பேட்டிங் விளையாடவும் வாய்ப்புள்ளது. இதனால், டி20ஐயில் குல்தீப் யாதவுக்கு இடம்கிடைப்பதும் சிரமமாகிவிடும்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2025: சூர்யகுமார் கேப்டன் இல்லை…? இந்திய அணியின் ஸ்குவாட் இதுதான்
மேலும் படிக்க | இரண்டு மடங்கு பலமாகும் இந்திய அணி… ரீ-என்ட்ரி கொடுக்கும் மாஸ் வீரர் – ஏன்?
மேலும் படிக்க | ரோகித், விராட் இல்லனா ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்திய அணியின் எதிர்காலம் நல்லா இருக்கும்!