டெல்லி: வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கைஉச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தலைநகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வா்மா. இவரது வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் ஒரு அறையில், கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது. […]
