கானா,
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா. இங்கு, தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை மந்திரி எட்வர்டு ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி இப்ராகிம் முர்தலா முகமது உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ மந்திரி மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கானா வரலாற்றில் பதிவான மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது. இதையடுத்து கானா அரசாங்கம் இந்த விபத்தை தேசிய துக்கமாக அறிவித்தது.
Related Tags :