மாஸ்கோ,
ரஷியாவிடம் இருந்து எண்ணை கொள்முதலை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். அவரின் இந்தப்பயணம் இந்தி இந்தியா-ரஷியா உறவை வலுப்படுத்துவதற்கானது என்று கூறப்படுகிறது. அஜித் தோவலின் பயணம் முன்னரே திட்டமிடப்பட்டதாகும். டிரம்பின் வரி விதிப்பு களால் இந்தப் பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. அமெரிக்கா மீண்டும் மீண்டும் ரஷியா விஷயத்தில் இந்தியாவை குற்றம் சாட்டி வருவதால், இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் அஜித் தோவலின் பயணம் ரத்து ஆகாமல் இருப்பது இந்தியாவின் நிலைபாட்டை காட்டுகிறது. வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.