புதுடெல்லி,
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், “நடப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவசர விவாதம் நடத்த வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு, குறிப்பாக சமூகத்தின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் பிரச்சினை ஆகும். எனவே இது குறித்து விவாதிக்க வேண்டும்’‘ என கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த மாநிலங்களவைக்கு உரிமை உண்டு என்று மாநிலங்களவை முன்னாள் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுதையும் கடிதத்தில் கார்கே சுட்டிக்காட்டியள்ளார்.