Flipkart Freedom Sale 2025: சாம்சங் ஸ்மார்ட்போன்களின் ரசிகரா நீங்கள்? உங்கள் போனை அப்கிரேட் செய்ய காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இப்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சாம்சங்கின் சிறந்த மாறுபாடான Samsung Galaxy S24 Ultra 5G, ஃபிளிக்பார்ட் ஃப்ரீடம் விற்பனையில் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஸ்மார்ட்போனில் ரூ.48,000 க்கும் அதிகமாக சேமிக்கலாம். முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
இந்த ஸ்மார்ட்போனில், சிறந்த போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுக்கும் திறன்கள், ஒரு ஃபிளாக்ஷிப்-நிலை ஸ்னாப்டிராகன் செயலி, வைப்ரண்ட் டிஸ்பிளே, S பென் ஆதரவு மற்றும் பல வித அம்சங்களை கொண்ட குவாட் கேமரா அமைப்பைப் பெறலாம். இந்த போனின் விலை ரூ.1,29,999 ஆக இருந்தது, ஆனால் இப்போது ரூ.80,000 க்கும் குறைவாகவே கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் மிகவும் மலிவான விலையில் Samsung Galaxy S24 Ultra 5G ஸ்மார்ட்போனை வாங்கும் வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஃபிளிக்பார்ட் ஃப்ரீடம் சேல்: Samsung Galaxy S24 Ultra விலை
கூகிளில் Samsung Galaxy S24 Ultra என்று சர்ச் செய்து, Flipkart பக்கத்திற்குச் சென்றால், ரூ.81,960க்கு பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போனைக் காணலாம். அதாவது இதில் ரூ.48,039 தள்ளுபடி கிடைகிறது. தள்ளுபடி இதனுடன் நிற்கவில்லை. உங்களிடம் Flipkart Axis Bank கார்டு இருந்தால், இந்த ஸ்மார்ட்போனில், ரூ.4,000 வரை சேமிக்கலாம். மேலும், மாதத்திற்கு ரூ.13,660 முதல் தொடங்கும் EMI மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிதான தவணைகளுக்கான வசதியும் கிடைக்கும்.
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால், அந்த பரிமாற்ற சலுகை மூலம், விலையை மேலும் குறைக்க முடியும். பழைய போனின் நிலைமையை பொறுத்து, ரூ.66,100 வரை இதற்கான மதிப்பு இருக்கக்கூடும். கூடுதல் கட்டணம் செலுத்தி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பிற ஆட்-ஆன் களையும் பெறலாம்.
Samsung Galaxy S24 Ultra: விவரக்குறிப்புகள்
– Samsung Galaxy S24 Ultra மென்மையான மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்கக்கூடிய Snapdragon 8 Gen 3 ஐக் கொண்டுள்ளது.
– இது 12GB RAM மற்றும் 1TB வரை சேமிப்பகத்துடன் வருகிறது.
– இந்த ஸ்மார்ட்போன், மென்மையான, பிரகாசமான மற்றும் துடிப்பான 6.8-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளேவை 2,600 nits பீக் பிரைடசுடன் வழங்குகிறது.
– 5,000 mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் ஆதரவுடன் வருவதால் பேட்டரி பேக் அப்பில் பிரச்சனை இருக்காது.
– கேமராவில் 200MP அகல சென்சார், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ், 10MP லென்ஸ், 12MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவை உள்ளன.
– இந்த போனில் 12MP செல்ஃபி கேமராவும் உள்ளது.