பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்: பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறை ரத்தாகிறது

சென்னை: பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்யவேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ல் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர். தமிழக அரசிடம் அறிக்கையை 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர்.

இந்​நிலை​யில், சென்னை கோட்​டூர்​புரம் அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், பள்​ளிக் கல்விக்​கான தமிழ்​நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். அதில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள் விவரம்:

ஒவ்​வொரு மாணவரும் நம்​பிக்​கை​யுடன் இரு மொழிகளை பேச, படிக்க, எழுத வைப்​பதே முதன்மை நோக்​கம். தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்ட விதி​களின்படி, மாணவர்​கள் கூடு​தலாக தம் தாய்​மொழியை கற்க வாய்ப்பு வழங்க வேண்​டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்​டாய தேர்ச்சி முறையை உறு​தி​செய்ய வேண்​டும். அதே​நேரம், ஆண்டு இறு​தித் தேர்​வுகளின் அடிப்​படை​யில் இல்​லாமல் திறன் அடிப்​படையி​லான மதிப்​பீட்டு முறை​களின்​படி தேர்ச்சி இருக்க வேண்​டும்.

10, 12-ம் வகுப்​பு​களுக்கு பொதுத் தேர்​வு​களை தொடர்ந்து நடத்த வேண்​டும். மாணவர் நலன் கரு​தி, பிளஸ் 1 வகுப்​புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​கிறது என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் அதில் இடம்​பெற்​றுள்​ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பள்​ளிக்​கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் கூறிய​போது, ‘‘பிளஸ் 1 வகுப்​புக்கு பொதுத் தேர்வு ரத்து என்ற அறி​விப்பை நடப்பு ஆண்​டில் இருந்தே செயல்​படுத்த உள்​ளோம். சமக்ர சிக்‌ஷா நிதி வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நல்ல தீர்ப்பை வழங்​கும் என்று நம்​பு​கிறோம்’’ என்​றார்.

3, 5, 8-ம் வகுப்​பு​களுக்கு கற்​றல் அடைவு தேர்வு: பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்​கள் வயதுக்​கேற்ப படித்​தல், எழுதுதல், எண்​ணறிவு திறன்​களை அடைவதை உறுதி செய்ய இயக்​கம் சார் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். மாணவர்​களின் திறன்​கள் தொடர்​பான தரவு​களை சேகரிக்க, பள்​ளி​களில் 3, 5, 8-ம் வகுப்​பு​களுக்கு தொடர் இடைவெளி​களில் மாநில அளவி​லான கற்​றல் அடைவு (ஸ்​லாஸ்) தேர்வு நடத்​தப்​படும்.

அடிப்​படை எழுத்​தறி​வு, எண்​ணறிவு திட்​டத்​தின் விளைவு​களை மதிப்​பிட​வும், இந்த திட்​டத்​தில் உரிய மாற்​றங்​களை கொண்​டு​வர​வும், 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை மூன்றாம் நபர் மதிப்​பீடு மேற்​கொள்​ளப்​படும்.

மாணவர்​கள் எளி​தில் அணுகும் வகை​யில் பாடப் புத்​தகங்​களை மாற்ற வேண்​டும். கற்​றலில் பின்​தங்​கிய மாணவர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களுக்கு குறைதீர்வு கற்​பித்​தலை வழங்கி வயதுக்​கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டு வரப்​படு​வார்​கள். முதல் தலை​முறை கற்​போர், பழங்​குடி​யினர், பெண் குழந்​தைகளை பள்​ளி​யில் தக்​கவைக்​க​வும், அவர்​களது கற்​றல் விளைவு​களை முன்​னேற்​ற​வும் முயற்சி மேற்​கொள்​ளப்​படும்.

பாகு​பாடு, பாலின அடிப்​படையி​லான வன்​முறை, முடி​வெடுக்​கும் திறன் போன்ற வாழ்க்​கைத் திறன் சார்ந்த சமூக சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் வளர்​இளம் பரு​வத்​தினர் சரி​யானவற்றை தெரிந்​தவர்​களாக, நெகிழ்​வுத்​தன்மை உடைய​வர்​களாக, திறன் பெற்​றவர்​களாக வளரத் தேவை​யான கலைத் திட்​டம் இணைக்​கப்​படும்.

புலம்​பெயர்ந்​தோர், பழங்​குடி​யின குழந்​தைகளுக்கு இரு​மொழிக் கல்வி வளங்​களை வழங்​கு​வதன் மூலம் அவர்​களது கற்​றல் இடைவெளியை குறைக்​கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களும் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

  • தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளை கள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய, நவீன விளையாட்டு களை இணைக்கவேண்டும். அதில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
  • மனப்பாடம் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை விட்டு, பாடக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறவேண்டும்.
  • ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம் படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.