கயானா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 280 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 60 ரன் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 284 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 63 ரன் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது.