தேர்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ராகுல் காந்தி தார்மிக அடிப்படையில் தனது எம்பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்கள் மீது நம்பிக்கை இல்லை என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அதோடு, இந்திய தேர்தல் ஆணையம் கோரியபடி, புகார் கடிதம் மற்றும் ஆவணத்தை வழங்கவும் மறுக்கிறார்.

அப்படியானால், தார்மிக அடிப்படையில் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தியும் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்கள் உயர் நீதிமன்றம், உச்சி நீதிமன்றம் அல்லது மக்கள் மன்றத்துக்குச் செல்ல வேண்டும். காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.

உங்களுக்கு சவுகரியம் என்றால் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். சிரமம் என்றால் நிராகரிக்கிறீர்கள். இத்தகைய அணுகுமுறை வேலை செய்யாது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பாரபட்சமற்ற அமைப்பு என்ற நற்பெயரை ஈட்டியுள்ளது. கடந்த கால உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

‘வாக்கு திருட்டு’ என்ற ராகுல் காந்தியின் கூற்று உண்மையற்றது. அராஜகமாகப் பேசக்கூடியவர் என அறியபபடும் ராகுல் காந்தி, தற்போது அழிவை ஏற்படுத்துபவராக ஆகிவிட்டார். அவர் இந்திய அரசியலமைப்பையும் இந்திய ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புகிறார். முதிர்ச்சியற்றவரான ராகுல் காந்தி, இந்திய தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதன் மூலம் அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு எதிராகப் போரைத் தொடங்கியுள்ளார்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நேற்​ று​முன்​தினம் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது “மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜகவுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. கர்​நாட​கா​வில் உள்ள ஒரு தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன” என்று பகிரங்​க​மாக குற்​றம்சாட்டி அவற்​றுக்கு சில ஆதாரங்​களை திரை​யிட்டு காட்​டி​னார்.

இதன் தொடர்ச்சியாக, “ம​கா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மையென உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும் அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும்” என்று தேர்​தல் ஆணை​யம் எச்​சரித்திருந்தது. இதனிடையே, ராகுல் காந்​தி தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் தேர்​தல் ஆணை​யத்​திடம் 5 கேள்வி​களை கேட்​டுள்​ளார். அவை:

1. மின்​னணு வாக்​காளர் பட்​டியலை ஏன் எதிர்க்​கட்​சிகளுக்கு தரு​வ​தில்​லை: எவற்றை மறைக்​கிறீர்​கள்?
2. தேர்​தல் முடிந்து 45 நாட்​களில் சிசிடிவி காட்​சிகள் மற்​றும் வீடியோ பதிவு​களை ஏன் அழிக்​கிறீர்​கள்?
3. கள்ள வாக்​கு​கள் மற்​றும் வாக்​காளர் பட்​டியலில் மாற்​றம் ஏன்?
4. எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை மிரட்​டு​வது ஏன்?
5. பாஜக.​வின் ஏஜென்​டாக தலைமை தேர்​தல் ஆணை​யம் மாறி​விட்​டதா என்​பதை எங்​களுக்கு தெளி​வாக சொல்​லுங்​கள்​. இவ்வாறு ராகுல்​ காந்​தி கேள்வி​கள்​ கேட்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.