பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை – 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்

  • தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • சல்மான் கானை தொடர்பு கொண்டதற்காக கனடாவில் காமடியன் கபில் சர்மாவின் ரெஸ்டாரண்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது லாரன்ஸ் பிஷ்னோய் குழு. “சல்மான் கானுடன் பணிபுரிபவர்கள் அதிலிருந்து விலகவில்லை என்றால் கொலை செய்வோம்” என ஹர்ரி பாஸ்கர் என்ற ரௌடி மிரட்டியிருக்கிறார்.

எஸ்.குமாரசாமி - தூய்மைப் பணியாளர் போராட்டம்
எஸ்.குமாரசாமி – தூய்மைப் பணியாளர் போராட்டம்
  • சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் அரசு – போராடுபவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

  • திருநெல்வேலியில் மென்பொருள் பொறியாளர் கவின் படுகொலையைத் தொடர்ந்து ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டுமென்ற விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்றட்டும்’ என்று இருக்காமல், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை இயற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக இருக்கட்டும்.” எனப் பேசியுள்ளார்.

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் போர் குறித்து விவாதிக்க இருக்கும் சூழலில், “உக்ரைன் பங்குபெறாத எந்த சந்திப்பும் ஆபத்தான தீர்வையே தரும்” என எச்சரித்துள்ளார் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
  • இந்திய விமானப் படைத் (IAF) தலைவர் ஏ.பி சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

  • செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்… அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி” எனப் பேசியிருக்கிறார்.

  • “வெறும் கருணாநிதி வெறுப்பு மற்றும் சினிமா புகழை வைத்து ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லாதவர்.” என விமர்சித்துள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

  • இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி தங்கச்சி மடம் அரசு மருத்துவமனை முன்பு மீனவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

  • பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. “பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்த ஓராண்டு அவகாசம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்.” என்பது உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • பாமகவில் நடைபெறும் பிரச்னைகள் ஒரு சிலரின் தூண்டுதலால் நடப்பதாகப் பேசியுள்ளார் திலகபாமா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.