முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

பெங்களூரு: ​வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார்.

இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறிய​தாவது: நாடாளு​மன்​றத்​துக்​குள் நான் உறு​தி​மொழி எடுத்​திருக்​கிறேன்.

ஆனால், வாக்​கு​கள் திருட்டு தொடர்​பாக உறு​தி​மொழி எடுக்க வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. வாக்​கு​கள் திருட்டு தொடர்​பாக காங்​கிரஸ் கட்சி குற்​றம் சாட்​டிய​வுடன் சில மாநிலங்​களின் தேர்​தல் ஆணைய இணை​யதளங்​கள் முடங்​கி​விட்​டன.

நாடு முழு​வதும் மின்​னணு வாக்​காளர் பட்​டியலை முழு​மை​யாக அணுகும் வகை​யில் தேர்​தல் ஆணை​யம் அனு​ம​திக்க வேண்​டும். அத்​துடன் வீடியோ பதிவு​களை​யும் வழங்க வேண்​டும்.

எங்​களுக்கு மின்​னணு வாக்​காளர் பட்​டியல் விவரம் கிடைத்​தால்​தான், இந்த நாட்​டின் பிரதமர், வாக்​கு​களை திருடித்​தான் பதவிக்கு வந்​தார் என்​பதை எங்​களால் நிரூபிக்க முடி​யும்.

கடந்த 10 ஆண்டு மின்​னணு வாக்​காளர் பட்​டியலை வழங்க வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்தை நாங்​கள் வலி​யுறுத்தி வருகிறோம். எங்​களுக்கு சில காலம் தேவைப்​படலாம். ஆனால், உங்​களை பிடிக்​காமல் விட​மாட்​டோம். இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.

ராகுல் காந்​தி, தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் தேர்​தல் ஆணை​யத்​திடம் 5 கேள்வி​களை கேட்​டுள்​ளார். அவை:

1. மின்​னணு வாக்​காளர் பட்​டியலை ஏன் எதிர்க்​கட்​சிகளுக்கு தரு​வ​தில்​லை: எவற்றை மறைக்​கிறீர்​கள்?
2. தேர்​தல் முடிந்து 45 நாட்​களில் சிசிடிவி காட்​சிகள் மற்​றும் வீடியோ பதிவு​களை ஏன் அழிக்​கிறீர்​கள்?
3. கள்ள வாக்​கு​கள் மற்​றும் வாக்​காளர் பட்​டியலில் மாற்​றம் ஏன்?
4. எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை மிரட்​டு​வது ஏன்?
5. பாஜக.​வின் ஏஜென்​டாக தலைமை தேர்​தல் ஆணை​யம் மாறி​விட்​டதா என்​பதை எங்​களுக்கு தெளி​வாக சொல்​லுங்​கள்​. இவ்வாறு ராகுல்​ காந்​தி கேள்வி​கள்​ கேட்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.