வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின், சாம்சன் – ஆனாலும் ஒரு டிவிஸ்டு இருக்கு..!!

Ashwin, Sanju Samson : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், அவர் ஆர்ஆர் அணிக்கு திரும்புவது பற்றி எழுந்துள்ள வதந்திகளுக்கு இறுதியாகப் பதிலளித்துள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் அஸ்வின் CSK-வை விட்டுப் பிரிந்து செல்லலாம் என சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. ‘Kutti Stories with Ash’ நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட சஞ்சு சாம்சனுடன் உரையாடும் போது, இந்த வதந்திகளை அஸ்வின் நகைச்சுவையாகக் கையாண்டார். சாம்சனின் எதிர்காலமும் ஐபிஎல் அணியில் விவாதப் பொருளாக உள்ள நிலையில், இருவரும் தங்களின் நிலை குறித்துப் பேசிக்கொண்டனர்.

அஸ்வின் – சாம்சன் பேட்டி

வதந்திகளுக்கு பதிலளித்த அஸ்வின், “நான் உங்களை நோக்கி நிறைய கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு முன், நான் நேரடியாக வந்து, என்னையே டிரேட் செய்து கொள்கிறேன். கேரளாவில் தங்கியிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு எதுவும் தெரியாது” என்று சாம்சனை சிரிக்க வைத்தார்.

மேலும், “நான் உங்களிடம் பேசி, நான் கேரளாவில் தங்கிவிடுகிறேன், நீங்கள் சென்னைக்குச் செல்ல முடியுமா என்று கேட்கலாம் என நினைத்தேன்” என்று கூறி, இந்த விவாதத்திற்கு நகைச்சுவை கலந்த முற்றுப்புள்ளி வைத்தார். 2025 ஐபிஎல் சீசனுக்காக அஸ்வின் Rs. 9.25 கோடிக்கு CSK-வால் வாங்கப்பட்டார். அவர் ஒன்பது போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். 2008 முதல் 2015 வரை CSK-வுக்காக விளையாடிய அஸ்வின், ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

அஸ்வின் விலகல்

Cricbuzz அறிக்கையின்படி, CSK நிர்வாகம் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் 2026 ஐபிஎல் சீசனுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளது. இந்த அறிக்கை, அஸ்வின் CSK அகாடமியின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அஸ்வின் வேறு அணிக்குச் சென்றால், அகாடமி இயக்குநர் பதவி “Conflict of Interest” ஆக மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ரா ரியாக்ஷன்

இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் பிளேயர் ஆகாஷ் சோப்ரா, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் வருகையால், சஞ்சு சாம்சனுக்கு 2026-க்கு முன் இருந்த அதே முக்கியத்துவம் இப்போது தக்கவைப்புத் தேர்வுகளில் இருக்காது என்று தெரிவித்துள்ளார். 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சாம்சனுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தகவல்கள் வந்தன. குறிப்பாக, காயம் காரணமாக அவர் 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாடினார். சூர்யவன்ஷி விளையாடும்போதெல்லாம், சாம்சன் தனது வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து மாற்றப்பட்டத்தையும் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்லர் நீக்கம் ஏன்?

தனது அதிகாரபூர்வ YouTube சேனலில், சோப்ரா கூறியதாவது, “சஞ்சு சாம்சன் ஏன் வெளியேற விரும்புகிறார்? இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனெனில் கடைசி மெகா ஏலம் நடந்தபோது, அவர்கள் ஜோஸ் பட்லரை வெளியேற்றினார்கள். யஷஸ்வி வந்ததாலும், சஞ்சு தொடக்க ஆட்டக்காரராக விளையாட விரும்பியதாலும், சஞ்சுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவர்கள் பட்லரை வெளியேற்றினார்கள் என்று நான் நினைத்தேன்.”

“ராஜஸ்தான் ராயலஸ் தக்கவைத்த அல்லது விடுவித்த வீரர்களில் சஞ்சுவின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது அது அப்படி இல்லை என்று தோன்றுகிறது. வைபவ் சூர்யவன்ஷி வந்துவிட்டதால், இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் ஏற்கெனவே தயாராக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் துருவ் ஜூரலையும் பேட்டிங் வரிசையில் மேலே அனுப்ப விரும்புகிறார்கள். எனவே, சஞ்சு வெளியேற விரும்புகிறார். அவர் அப்படி நினைத்தால் அது சாத்தியம். இவை யூகங்கள்தான். சஞ்சு சாம்சன் மற்றும் ராஜஸ்தான் அணியின் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது,” என்று சோப்ரா மேலும் கூறினார்.

சஞ்சு சாம்சன் CSK அல்லது KKR-க்குச் செல்வாரா?

ஒரு அறிக்கையின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சஞ்சு சாம்சனை தங்கள் அணியில் இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. “முதலில் என் மனதில் வரும் பெயர் CSK அல்ல,” என்று சோப்ரா கூறினார். “KKR தான் மிகவும் ஆர்வமாக இருக்கும் அணி. KKR-க்கு இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் இல்லை, இந்த இடத்துக்கு சாம்சனை அவர்கள் கொண்டு வர முயற்சிப்பார்கள் என நினைக்கிறேன்” என சோப்ரா மேலும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.