விநாயகர் சிலைகளை இயற்கை பொருட்களால் செய்ய வேண்டும்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: விநாயகர் சிலைகளை இயற்கை பொருட்​களால் மட்​டுமே செய்ய வேண்​டும் என்று மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் அறிவுறுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக வாரி​யம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சுற்​றுச்​சூழலைப் பாது​காப்​ப​தில் தொன்​று தொட்டு சிறந்த மாநில​மாக தமிழகம் விளங்​கிவரு​கிறது. சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் பொது​மக்​களாகிய நமக்கு பெரிய கடமை இருக்​கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு, ஏரி மற்​றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதா​ரத்தை தரு​கின்​றன.

அவற்​றைப் பாது​காக்க, விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்​டாடும்​போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்​திய மாசுகட்​டுப்​பாடு வாரிய வழி​காட்​டு​தல்​படி, மாவட்ட நிர்​வாகம் குறிப்​பிட்​டுள்ள இடங்​களில் மட்​டும் கரைத்​து, நீர்​நிலைகளை​யும் சுற்​றுச்​சூழலை​யும் பாது​காக்க வேண்​டும். பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்​டிக் மற்​றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்​றுச்​சூழலை பாதிக்​காத களி மண் போன்ற மூலப்​பொருட்​களால் மட்​டுமே செய்​யப்​பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனு​ம​திக்​கப்​படும்.

சிலைகளின் ஆபரணங்​கள் தயாரிப்​ப​தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்​கோல் போன்​றவற்​றைப் பயன்​படுத்​தலாம். சிலைகளை பளபளப்​பாக மாற்ற, மரங்​களின் இயற்கை பிசின்​களை பயன்​படுத்​தலாம். நீர் நிலைகள் மாசுபடு​வதை தடுக்​கும் வகை​யில், வைக்​கோல் போன்ற சுற்​றுச்​சூழலுக்கு உகந்த பொருட்​கள் மட்​டுமே சிலைகள் தயாரிக்க அல்​லது சிலைகள், பந்​தல்​களை அலங்​கரிக்க பயன்​படுத்த வேண்​டும்.

சிலைகளுக்கு வர்​ணம் பூசுவதற்கு நச்சு மற்​றும் மக்​காத ரசாயன சாயம், எண்​ணெய் வண்​ணப் பூச்​சுகளை கண்​டிப்​பாக பயன் படுத்​தக்​கூ​டாது. சிலைகளின் மீது எனாமல் மற்​றும் செயற்கை சாயத்தை அடிப்​படை​யாக கொண்ட வண்​ணப் பூச்​சுகளை பயன் படுத்​தக் ​கூ​டாது, சுற்​றுச்​சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்​கக்​கூடிய, நச்சு கலப்​பற்ற இயற்கை சாயங்​கள் மட்​டுமே பயன்படுத்தப்பட வேண்​டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்​ணப்​பூச்​சுகள் மற்​றும் பிற நச்சு ரசாயனங்​கள் கொண்ட பொருட்​களுக்கு பதிலாக, இயற்கை பொருட்​கள் மற்​றும் இயற்கை சாயங்​களால் செய்​யப்​பட்ட அலங்​கார ஆடைகள் மட்​டும் பயன்​படுத்​தப்பட வேண்​டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்​வாகத்​தால் குறிப்​பிடப்​பட்​டுள்ள இடங்​களில் மட்​டும் மத்​திய மாசுகட்​டுப்​பாடு வாரி​யத்​தின் விதி​முறைகளின்​படி கரைக்க வேண்​டும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.