இந்தியாவில் ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்தின் Citroën 2.0 என்ற செயல் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் விற்பனையில் உள்ள மாடல்களை மேம்படுத்தவும், டீலர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும் உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பொழுது 10 டீலர்களை கொண்டிருந்த சிட்ரோயன் தற்பொழுது 80 டீலர்களை பெற்றுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 150 டீலர்களாக உயர்த்த உள்ளது,
ஸ்டெல்லாண்டிஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஷைலேஷ் ஹசேலா, புதிய திட்டம் குறித்து பேசும் பொழுது..,
உலகளவில் ஸ்டெல்லாண்டிஸுக்கு மிகவும் உற்சாகமான மற்றும் வாய்ப்புகளில் ஒன்றாக இந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் எங்கள் சிட்ரோயன் 2.0 புதிய செயல் திட்டத்திற்கு மாறுவது இந்தியாவிற்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒரு தீர்க்கமான படியாகும்.”
மேலும் “உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், ஆழமான நெட்வொர்க் அணுகல் மற்றும் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் இடைவிடாத கவனம் செலுத்துவதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுடன் நாங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக இணைந்து வருகிறோம்.
இது விரைவான வெற்றிகளைப் பற்றியது அல்ல, இது நம்பிக்கை மற்றும் நீண்ட கால மதிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நிலையான வளர்ச்சியைப் பற்றியது.” என குறிப்பிட்டார்.
எனவே, இந்த அறிவிப்பின் மூலம் சிட்ரோயன் கார்களின் தரம், நுட்பங்கள் சார்ந்தவற்றில் பல்வேறு நவீன அம்சங்களை பெறுவதுடன் போட்டியாளர்களுக்கு சாவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது.
C3, பாசால்ட் மற்றும் ஏர்கிராஸ் போன்றவற்றில் கூடுதலாக நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான வசதிகளை கொண்டு மேம்படுத்த உள்ள நிலையில் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.