ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்று இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ட்ரம்பின் இந்த முடிவைக் கடுமையாக சாடியுள்ளார் அவரது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்.
இந்தியா, ரஷ்யா, சீனா
“ரஷ்யாவைப் பாதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் இந்தியா மீது போட்டுள்ள இரண்டாம் கட்ட வரி, இந்தியாவை ரஷ்யா, சீனாவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லும். மேலும், அவர்கள் மூவரும் இணைந்து அமெரிக்காவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்தலாம்.

சீனா மீது ட்ரம்ப் வரியை குறைந்துள்ளதும், இந்தியா மீது அதிக வரியைப் போட்டுள்ளதும், இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து அமெரிக்கா பக்கம் நகர்த்தி வந்த அமெரிக்காவின் பல ஆண்டு முயற்சியை இது சிதைக்கும். சீனாவிற்கு அதிக சலுகை காட்டுவது மிகப்பெரிய தவறு” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா மீது சந்தேகம்
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர் கிறிஸ்டோபர் படில்லா, “இந்தியாவின் மீதான இந்த வரி இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவைப் பாதிக்கலாம். மேலும், இது, அமெரிக்காவை, ‘நம்பகமான கூட்டாளியா?’ என்கிற சந்தேகத்தை உருவாக்கும். இந்த வரி நினைவில் இருந்துகொண்டே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…