ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு யாஷ் தயாள் ஒரு முக்கிய காரணம். இந்த சூழலில் அவர் மீது அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம், காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயாள் தன்னை 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில்,யாஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ஜெய்ப்பூரை சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது. யாஷ் தயாள் மீது அடுத்தடுத்த பாலியல் தொடர்பான புகார் எழுந்தது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆவார். அவருக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாக ஆசை காட்டி இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் தெரித்தார்.
இதன் காரணமாக யாஷ் தயாள் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டது. இதனால், யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உத்தரப் பிரேதசம் கிரிக்கெட் சங்கம் உபி டி20 லீக்கில் விளையாட தடை செய்துள்ளது. உத்தர பிரதேச டி20 லீக் தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக ரூ. 7 லட்சத்திற்கு ஏலத்தில் யாஷ் தயாள் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் மீதான பாலியல் புகார்கள் காரணமாக, உபி கிரிக்கெட் நிர்வாகம் இப்படியான அதிரடி முடிவு எடுத்துள்ளது.
மேலும், உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் கடுமையாக எச்சரிததாகவும் கூறப்படுகிறது. இதனால் யாஷ் தயாளின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. aதிகாரப்புர்வமான அறிவிப்பு வரும் பட்சத்தில், பிசிசிஐ அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே தடை செய்யவும் தயங்காது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.