ட்ரம்ப் 2-வது ஆட்சியில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி கேட்​கப்​பட்​டது.

இதற்கு பதில் அளித்த மத்திய வெளி​யுறவுத்​துறை இணை​யமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் 2-வது ஆட்சி காலத்​தில் இது​வரை 1,703 இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 1,562 பேர் ஆண்​கள், 141 பேர் பெண்​கள்.

அதி​கபட்​ச​மாக பஞ்​சாபைச் சேர்ந்த 620 பேரும், ஹரி​யா​னாவைச் சேர்ந்த 604 பேரும், குஜ​ராத்​தைச் சேர்ந்த 245 பேரும், தமிழகத்​தைச் சேர்ந்த 17 பேரும் விமானங்​கள் மூலம் திருப்பி அனுப்​பப்​பட்​டனர். கடந்த 2009 முதல் 2024-ம் ஆண்டு வரை 15,564 இந்​தி​யர்​களை அமெரிக்கா திருப்பி அனுப்​பி​யுள்​ளது.

அமெரிக்க பல்​கலைக்​கழகங்​களில் பயிலும் வெளி​நாட்டு மாணவர்​கள் இஸ்​ரேலுக்கு எதி​ராக போராட்​டம் நடத்​தி​ய​தால், சில கெடு​பிடிகளை அமெரிக்கா பின்​பற்​றியது. இதனால் இந்​திய மாணவர்​கள் விசா பெறு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது. தற்​போது இந்த பிரச்​சினை சரிசெய்​யப்​பட்​டு, மாணவர்​களுக்கு விசா வழங்​கும் நடை​முறை​கள் தொடங்​கி​யுள்​ள​தாக அமெரிக்க அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இவ்​வாறு அமைச்​சர் கீர்த்தி வர்​தன்​ சிங்​ தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.