டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதாலும் தெருநாய்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. டெல்லியில் தெருநாய்களை இடமாற்றம் செய்வதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், […]
