அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு தண்டனை: உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: தற்​போது டெல்லி துணை நிலை ஆளுந​ராக இருக்​கும் வி.கே.சக்​சே​னா, 25 ஆண்​டு​களுக்கு முன் குஜ​ராத்​தில் அரசு சாரா அமைப்பு ஒன்​றின் தலை​வ​ராக இருந்​தார். அப்​போது நர்​மதை பாது​காப்பு இயக்​கத்​துக்கு அவர் அளித்த காசோலை, வங்​கி​யில் கணக்கு இல்​லா​ததால் திரும்பி விட்​ட​தாக அதன் தலை​வர் மேதா பட்​கர் குற்​றம் சாட்​டி​னார். மேலும் சக்​சே​னாவை கோழை, தேசபக்​தி​யற்​றவர், ஹவாலா பணப் பரி​மாற்​றத்​தில் ஈடு​படு​கிறார் என மேதா பட்​கர் விமர்​சனம் செய்​தார்.

இது தொடர்​பாக வி.கே.சக்​சேனா தொடர்ந்த அவதூறு வழக்​கில் மேதா பட்​கருக்கு விசா​ரணை நீதி​மன்​றம் 5 மாத சிறை தண்​டனை விதித்​தது. எனினும் சிறை தண்டனைக்கு பதிலாக நன்னடத்தைக்கான தகுதி காணுதல் அடிப்படையில் அவரை ஓராண்டில் விடுவிக்க கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.

இதை டெல்லி நீதிமன்றம் உறுதி செய்தது.இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், என்​.கோடீஸ்​வர் சிங் அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது. இதில் டெல்லி உயர் நீதி​மன்ற தீர்ப்​பில் நீதிப​தி​கள் தலை​யிட மறுத்​தனர். எனினும் மேதா பட்​கருக்கு வி​திக்​கப்​பட்​ட ரூ.1 லட்​சம்​ அபராதத்​தை தள்​ளு​படி செய்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.