திருத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: ​திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இந்​தி​யா​வில் கடந்த 60 ஆண்டுகளுக்​கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வரு​மான வரி சட்​டத்​துக்கு மாற்​றாக புதிய சட்​டம் இயற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

இதன்​படி, பல சிக்​கலான நடை​முறை​கள் நீக்​கப்​பட்​டு, எளிமைப்​படுத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா 2025 கடந்த பிப்​ர​வரி 13-ம் தேதி மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், இதுகுறித்து ஆராய பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலை​மை​யில் தேர்​வுக்கு குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு பல்​வேறு தரப்​பினரின் கருத்​துகளை கேட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்​பித்​தது. இதனிடையே, ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட மசோதா கடந்த வெள்​ளிக்​கிழமை திரும்​பப் பெறப்​பட்​டது.

இந்​நிலை​யில், தேர்​வுக்​குழு​வின் பெரும்​பாலான பரிந்​துரைகள் அடங்​கிய திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோ​தாவை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளு​மன்ற மக்​களவை​யில் நேற்று அறி​முகம் செய்​தார். பின்​னர் சிறிது நேரம் நடை​பெற்ற விவாதத்​துக்​குப் பிறகு அந்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதனுடன் வரி சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​வும் மக்​களவை​யில் நிறைவேறியது. இதையடுத்​து, இந்த மசோ​தாக்​கள் மாநிலங்​களவை​யில் தாக்​கல்​ செய்​யப்​பட உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.