டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். இயற்கை உங்களை விட்டுவைக்காது என காட்டமாக கூறிய நீதிபதிகள், ’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள். ஆனால் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டீர்கள், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்துங்கள் என்று அவர்களை அறிவுறுத்தியதுடன், அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இரு வாரத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு […]
