ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம்: பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி: ரஷ்​யா, உக்​ரைன் இடையே கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. பல்​வேறு முயற்​சிகள் மேற்​கொண்ட போதி​லும், ரஷ்யா போர் நிறுத்​தத்​துக்கு சம்​ம​திக்​க​வில்​லை.

இந்​நிலை​யில் வரும் வெள்​ளிக்​கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடி​யாக சந்​தித்​துப் பேசவுள்​ளார். அப்​போது போர் நிறுத்​தம் குறித்து முடிவு எடுக்​கப்​படலாம் எனத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் பிரதமர் மோடியை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்​பு​கொண்டு பேசி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக உக்​ரைன் அதிபர் கூறும்​போது, “உக்​ரைன் நகரங்​கள் மற்​றும் கிராமங்​கள் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பிரதமர் மோடி​யிடம் தெரி​வித்​தேன். போரை நிறுத்​து​வதற்​கான நடவடிக்​கைகளை எடுத்​தா​லும் ரஷ்யா அதற்கு சம்​ம​திக்​க​வில்​லை’’ என்​றார். மோடி​யுடன், ஜெலன்​ஸ்கி நீண்ட நேரம் பேசி​ய​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்​தித்​துப் பேச விரும்​புவ​தாக​வும் அதிபர் ஜெலன்​ஸ்கி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்​கத்​தில் கூறும்​போது ‘‘உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி​யுடன் பேசியதி​லும், சமீபத்​திய முன்​னேற்​றங்​கள் குறித்த அவரது பார்​வை​களைக் கேட்​ட​தி​லும் மகிழ்ச்​சி’’ எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

மேலும் ரஷ்​யா, உக்​ரைன் இடையே​யான போருக்கு அமை​தி​யான தீர்வு காண வேண்​டியதன் அவசி​யம் குறித்த இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை அவரிடம் தெரி​வித்​த​தாக​வும் பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். மேலும், இந்த விஷ​யத்​தில் சாத்​தி​ய​மான பங்​களிப்பை வழங்க இந்​தியா உறு​தி​யாக இருப்​ப​தாக​வும், உக்​ரைனுட​னான இரு​நாட்டு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வ​தி​லும் உறுதி பூண்​டுள்​ள​தாக பிரதமர் மோடி தனது பதி​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.